செயல்முறைகள், தீர்மானங்கள் மற்றும் பகுத்தறிவான பெறுபேறுகளை ஈட்டுதல் தொடர்பான அளவுகோல்களை நிர்ணயிக்கும் விதிகள் மற்றும் பிரமாணங்களின் ஆவணப்படுத்தப்பட்ட தொகுதியே கொள்கைகள் ஆகும். MAS நிறுவனத்தின் விழுமியங்கள். அடிப்படை வலிமைகள் மற்றும் கலாசாரத்தைப் பாதுகாக்கும் முகமாகவே இக் கொள்கைகள் வகுக்கப்பட்டுள்ளன. நிறுவனத்தின் செயற்பாடுகளில் செல்வாக்குச் செலுத்தும் உள்ளக மற்றும் வெளிப்புற காரணிகள் அனைத்தையும் உள்ளடக்கும் இக் கொள்கைகள், MAS DNAக்கு இசைவான நடைமுறைகள் மற்றும் நெறிமுறைகளை ஏற்படுத்தும் நோக்கத்திற்காக அமுலாக்கப்படுகின்றன.
கொள்கையை மீறும் எந்தச் செயலும் MAS DNAக்கு முரணானதாகக் கருதப்பட்டு, கண்டிப்பான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலதிக விளக்கத்திற்கு, தயவுசெய்து உங்கள் SBU/ பிரிவு/குழுக் குறியீட்டு அலுவலர்கள் அல்லது HR பிரிவுடன் தொடர்புகொள்ளவும்.
சமூக ஊடகம் என்பது எமது வாழ்க்கையின் பிரதான அம்சங்களில் ஒன்றாகும். தனிநபர்கள் இணையவழித் தொடர்பாடல்களைப் பயன்படுத்தித் தகவல்களை வெளியிடவும், விடயங்களைப் பகிர்ந்துகொள்ளவும், மற்றவர்களுடன் பகிரங்கமான முறையில் இடைத்தொடர்புகொள்ளவும், பரந்துபட்டவர்களுடன் தொடர்பாடவும் சமூக ஊடகங்கள் இடமளிக்கின்றன. தொழிற் சூழலிலும் அதற்கு வெளியிலும் ஊழியர்கள் சமூக ஊடகங்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று MAS எதிர்பார்ப்பதை இக் கொள்கை எடுத்துக்கூறுகின்றது.
ஊழியர்கள் தமது பிரதான தொழில் கடமைகளுக்கு இடையூறு ஏற்படாத முறையிலும் MAS DNA மற்றும் தொடர்புடைய கொள்கைகளுக்கு அமைவாகவும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும்படி கேட்கப்படுகின்றனர். அவர்கள் சமூக ஊடகங்களின் “தனிப்பட்ட” பாவனைக்கும் ‘பிரத்தியேக” பாவனைக்கும் இடையிலான வித்தியாசத்தை அறிந்திருக்க வேண்டும். அத்துடன், எந்த வழியிலாவது சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும்போது MAS நிறுவனத்தின் இரகசியத்தன்மை மற்றும் IT கொள்கைக்கு மதிப்பளிக்க வேண்டும்.
MAS நிறுவனத்தில், தகவல் வெளிப்படுத்துவோர் (Whistleblowers) எங்கள் மக்களை, எங்கள் வணிகத்தை மற்றும் எங்கள் நற்பெயரைப் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். எனவே, MAS இன் தகவல் வெளிப்படுத்தல் (Whistleblowing) கொள்கை, MAS நிறுவனத்தின் அனைத்து பங்குதாரர்களையும், அதில் பணியாளர்கள் மற்றும் MAS உடன் தொடர்புடைய மூன்றாம் தரப்பினரையும், உடனடி கவனம் தேவைப்படும் எந்தவொரு சட்டவிரோதமான, ஒழுக்கமற்ற அல்லது பொருத்தமற்ற நடத்தை, நடைமுறை, செயல் அல்லது தவறுகளையும் புகாரளிக்க ஊக்குவிக்கிறது. இது MAS நிறுவனத்தின் கொள்கைகள் மற்றும் மதிப்புகளை மீறும் செயல்களில் மட்டுப்படுத்தப்படாமல், நேர்மை மற்றும் வெளிப்படைத்தன்மையின் உயர்ந்த தரநிலைகளை நிலைநிறுத்துவதற்கான எங்கள் அர்ப்பணிப்பை மேலும் வலுப்படுத்துகிறது.
MAS மூலம் உருவாக்கப்படும் இரகசியத் தகவல்கள் பெறுமதிமிக்க ஒரு மூலவளமாகும். எனவே, இரகசியத் தகவல்களை அடையாளம் காண்பதும் அவற்றைப் பாதுகாப்பதும் எப்படியென அறிந்திருப்பது இப் பெறுமதியைப் பேணுவதற்கு முக்கியமானதாகும். மூன்றாம் தரப்புகளின் இரகசியத் தகவல்கள் ஏதேனும் வகையில் துஷ்பிரயோகம் செய்யப்படுவதற்கு எதிராக எம்மைப் பாதுகாத்துக்கொள்ளும் தனியுரிமையும் MAS ஊழியர்கள் என்ற முறையில் எமக்கு உண்டு. ஊழியர்களும் மற்றவர்களும் இரகசியத் தகவல்களை எவ்வாறு கையாள அல்லது கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்குத் தெளிவான மற்றும் நியாயமான வழிகாட்டுதல்களை வழங்குவதே இக் கொள்கையின் நோக்கமாகும். MAS நிறுவனத்தின் போட்டி அனுகூலமும் தொடர்ச்சியான வெற்றியும் பேணப்படுவதை இது உறுதிப்படுத்தும்.
நீங்கள் ஒரு MAS ஊழியர் அல்லது ஆலோசகர் என்ற முறையில், நிறுவனத்திற்கு வருபவர்களுடன் அல்லது மூன்றாம் தரப்பினருடன் தொடர்புகொள்வதாக இருந்தால், எமது இரகசியத் தகவல்களை வெளியிடும்போது அல்லது மற்றவர்களின் இரகசியத் தகவல்களைப் பெறும்போது இக் கொள்கைக்கு அமைவாகச் செயற்பட வேண்டும். உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், உங்கள் பிரிவு முகாமையாளருடன், IP இடர் முகாமையாளருடன் மற்றும்/அல்லது குழுச் சட்டப் பிரிவுடன் தொடர்புகொள்ள வேண்டும்.
பாகுபாடு காட்டப்படுதல் நேரடியாக அல்லது நேரடியற்ற முறையில் இடம்பெறக்கூடும். தொழிலுடன் தொடர்பில்லாத தனித்துவமான பண்புகளின் அடிப்படையில் ஒரு நபரை அல்லது ஒரு குழுவை நியாயமற்ற முறையில் மற்றும்/அல்லது சாதகமற்ற முறையில் நடத்துவதை அல்லது நடத்த உத்தேசிக்கப்படுவதை இது குறிக்கும். ஒருவர் உடல் ரீதியாக, வாய்ப் பேச்சின் மூலம் அல்லது காட்சி வடிவங்கள் மூலம் விரும்பத்தகாத அல்லது பாரபட்சமான முறையில் நடத்தப்படும்போது துன்புறுத்தல் நிகழ்கின்றது.
MAS ஊழியர்கள் மற்றும் அதிகாரமளிக்கப்பட்ட மூன்றாம் தரப்பினர் தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளைப் பாதுகாப்பான மற்றும் திறமையான முறையில் நிறைவேற்றுவதற்கு அவசியம் என்ற அடிப்படையில், MAS நிறுவனம் அதன் கணனி அமைப்புகளின் தகவல்ளையும் IT சேவைளையும் பயன்படுத்தும் உரிமையை அவர்களுக்கு வழங்கும். இலத்திரனியல் அல்லது பௌதிக வடிவத்தில் MAS நிறுவனத்தின் இரகசியமான மற்றும் வியாபாரத்திற்கு முக்கியமான தகவல் சொத்துகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொருட்டு, மேற்படித் தகவல்கள் மற்றும் சேவைகளின் ஏற்றுக்கொள்ளத்தக்க பாவனயை அனுமதிப்பதற்கு, தெளிவான மற்றும் நியாயமான நெறமுறையை இக் கொள்கை எடுத்துக்கூறுகின்றது. அனுமதியற்ற அணுகல், பாவனை, வெளிப்படுத்துதல், சீர்குலைத்தல், மாற்றம் செய்தல், இடையீடு செய்தல், பதிவுசெய்தல், அழித்துவிடுதல் என்பவற்றை இது உள்ளடக்கும். மேற்படித் தகவல் அமைப்புகள் மற்றும் IT சேவைளை அணுகும் வாய்ப்புள்ள சகல MAS ஊழியர்களும் மூன்றாம் தரப்பினரும் எல்லா வேளைகளிலும் இத் தகவல் அமைப்புப் பாவனைக் கொள்கை, இரகசியத்தன்மைக் கொள்கை, தகவல் பாதுகாப்புக் கொள்கை என்பவற்றிற்கு இணங்கியொழுக வேண்டும்.
நிறுவனத்தின் விழுமியங்கள் மற்றும் கொள்கைகளுக்கு இணங்குவதை உறுதி செய்ய தேர்தல்கள் மற்றும் பிரச்சாரம் குறித்த இந்தக் கொள்கை, எதிர்காலத்தில் தேர்தல் வேட்பாளராக விரும்பும் மற்றும் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படும் சேவை ஊழியர்களுக்கான வழிகாட்டுதலை வழங்குகிறது.
ஊழியர் ஒருவரின் வியாபார ரீதியான தீர்ப்புகளிலும் தீர்மானங்களிலும் தனிப்பட்ட நலன்களின் முறையற்ற செல்வாக்கு செலுத்தப்படாதிருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் வியாபாரத்தை நடத்த MAS தன்னை அர்ப்பணித்துள்ளது.
ஊழியர் ஒருவரின் தனிப்பட்ட நலன்கள் அவர் MASஇல் எடுக்கும் தீர்மானங்களில் செல்வாக்குச் செலுத்தினால், செல்வாக்குச் செலுத்தும் சாத்தியத்தைக் கொண்டிருந்தால் அல்லது செல்வாக்குச் செலுத்தக்கூடும் என்று கருதப்பட்டால், நலன் முரண்பாட்டு நிலைமை ஒன்று அங்கு ஏற்படுகின்றது. அத்தகைய நலன் முரண்பாடுகளைத் தடுப்பதற்கான மற்றும்/அல்லது முகாமைத்துவம் செய்வதற்கான கோட்பாடுகளை வகுத்துக்கூறுவதே இக் கொள்கையின் நோக்கமாகும்.
நலன் முரண்பாடு ஒன்று ஏற்படும்போது, அந்த முரண்பாட்டைக் கையாள்வதற்கு வெளிப்படுத்துகை, சம்மதம் மற்றும் நெறிமுறை என்ற மூன்று-விதி அணுகுமுறையை MAS பின்பற்றுகின்றது.
நலன் முரண்பாடு ஏற்படாதிருப்பதை அல்லது அதற்கான சாத்தியம் ஏற்படாதிருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் ஊழியர்கள் தீர்மானங்களை எடுப்பதன் அல்லது செயற்படுவதன் மூலம் நலன் முரண்பாடுகளை ஆரம்பத்திலேயே தவிர்க்க முடியும்.